Friday, May 12, 2017

புலம்பு ...

க்ருஷ்ணனின் தபால்🙏🏼
ராதேக்ருஷ்ணா...
புலம்பவேண்டும் போலிருக்கிறதா ?!?
அப்படியென்றால் க்ருஷ்ணன் உனக்கு செய்த நல்லவைகளை நினைத்து புலம்பு ...
க்ருஷ்ணனின் நாமத்தைப் புலம்பு ...
க்ருஷ்ண பக்தர்களை நினைத்து புலம்பு...
இதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப அல்ப மனிதர்களை பற்றி ஏன் புலம்புகிறாய் ...
சீ... சீ... வெட்கமாயில்லை !!!
🙏🏼குருஜீ கோபாலவல்லிதாசர்🙏🏼

கண்ணனை நம்பு !



 *க்ருஷ்ணனின் தபால்* 📬
உன் ஆனந்தத்தை யாரும் கெடுக்கவேமுடியாது !
உன் துக்கத்தை நீ தான் சரி செய்துகொள்ள வேண்டும்...
கண்ணனை நம்பு !
கண்ணன் நாமத்தைச் சொல்லு !
உன்னை நீ சரி செய்துகொண்டால், உன் வாழ்க்கை தானாக சரியாகும் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Thursday, January 26, 2017

கண்ணனை அனுபவி...

க்ருஷ்ணனின் தபால் 
📬
மனிதரை வெறுக்க வெறுக்க, நீ அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறாய் !
அதை விட கண்ணனை அதிகம் நினைக்க நினைக்க, நீ கண்ணனையே அனுபவிக்கிறாய் !
கண்ணனை அனுபவிக்கும் நேரத்தை ஏன் குறைக்கவேண்டும் ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்